இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் – நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து சுமார் 80 கோடி பேருக்கு இந்தியா உணவளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்பினாலும் அதற்காக இந்தியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சமரசம் செய்ய முடியாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது மக்கள் நலன்களுக்கு அவசியமான, சுதந்திரமான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒரே மாதத்தில் 6000 ரோஹிங்ய அகதிகள் உயிரிழப்பு!
கன மழை – பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...
|
|