இந்தியாவிலும் டெங்கு – தமிழகத்தில் 5013 பேர் பாதிப்பு!

Friday, July 28th, 2017

இந்தியாவில் டெங்கு நோயின் காரணமாக , 36 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், இந்த ஆண்டில், 5,013 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது, ‘டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பாதிப்புகள் குறித்து, அடிக்கடி அதுதொடர்பான தகவல்களை இந்திய அரசாங்கம் வெளியிட்டுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.ngdcp.gov.in என்ற இணையதளத்தில்,இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

டெங்கு பாதிப்புள்ள, 35 மாநில பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டெங்கு பாதித்த மாநிலங்களில் முதல் நான்கு இடங்களை, தென் மாநிலங்கள் பெற்றுள்ளன.

கேரளா மாநிலத்தில், 12 ஆயிரத்து, 906 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்; 22 பேர் இறந்துள்ளனர்; தமிழகத்தில், 5,013 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் இறந்துள்ளார்; கர்நாடகாவில், 3,682 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் இறந்துள்ளனர்.ஆந்திராவில், 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; புதுச்சேரியில், 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: