இந்தியாவிலும் ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு !

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 31332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1897 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 73 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. 7696 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3744 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 3314 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்
Related posts:
ஜெருசலம் ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீனர் சுட்டுக் படுகொலை!
இலண்டனில் திடீர் வெள்ளம் - மக்கள் அவதி!
இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோ...
|
|