இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டம்? – இந்திய ஊடகங்கள் தகவல்!
Wednesday, September 6th, 2023
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஜி20 மாநாட்டுக்கு இந்த வருடம் இந்தியா தலைமை தாங்கவுள்ள நிலையில் குறித்த பெயர் மாற்றும் திட்டத்திற்கு G20 நாடுகளின் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லியில் எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளதோடு அதில் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை!
பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை - கல்வி ...
|
|
|


