இந்தியர்கள் மூவர் கைது – கனடாவிலிருந்து விபரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்!

Sunday, May 5th, 2024

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியர்கள் மூவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி, வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில்,  ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைச் சம்பவத்தில், கரன் பிரார் (வயது 22), கமல்ப்ரீத் சிங் (வயது 22) கரன்ப்ரீத் சிங் (வயது 28) ஆகிய மூன்று இந்தியர்களே இவ்வாறு கனடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்,

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவிலுள்ள ஒரு சிலருடன் தொடர்பில் இருப்பது போல் தெரிய வருவதாகவும், பஞ்சாபிலிருந்து திட்டமிட்டு கனடாவில் சில குற்ற சம்பவங்கள் நடந்து வருவது கவலையளிப்பதாகவம் தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய விபரங்களை கனடா பொலிஸார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்

000

Related posts:


வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்கா...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ...
அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் - கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச...