இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபரால் கொலை மிரட்டல்!

Thursday, May 23rd, 2024

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையின் புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அலுவலகத்துக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்திற்காக வாகன பேரணியில் வரும் போது அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குறித்த மர்ம நபர் தொலைபேசி அழைப்பின் ஊடாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: