இத்தாலியை புரட்டியெடுத்த பூகம்பம்!

மத்திய இத்தாலியில் இரு சக்திவாய்ந்த பூகம்பங்கள் தாக்கியுள்ளன. இத்தாலியில் கடந்த ஓகஸ்டில் உயிரிழப்புக் கொண்ட பூகம்பம் தாக்கிய நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அதிர்வில் உயிரிழப்புகள் இடம்பெறாதபோதும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த பூகம்பத்தால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டு ஓகஸ்டில் இதே பிராந்தியத்தை தாக்கிய பூகம்பத்தில் சுமார் 300 பேர் பலியாகினர்.
ஆரம்பத்தில் 5.5 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து இரண்டு மணிநேரத்தின் பின் 6.1 ரிச்டர் அளவில் இரண்டாவது சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்று ஏற்பட்டது.
மீட்பாளர்கள் புதன் இரவில் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டபோதும், மழை காரணமாக இடையூறு ஏற்பட்டிருப்பதோடு பூகம்பத்தின் பாதிப்பு குறித்து பதிப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பூகம்பம் ஏற்பட்டுள்ள மையத்திற்கு அருகில், கிராமங்கள் சேதமடைந்துள்ளன என்றும் கட்டடங்கள் சரிந்ததாகவும் மற்றும் மின்சாரம் இல்லாத நிலை நிலவுவதாகவும் உள்ளூர் மேயர்கள் தெரிவித்தனர்.
Related posts:
|
|