இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி!

நோர்வேயிலுள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது
நோர்வேயின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன.
பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
Related posts:
ட்ரம்பின் அறிவிப்பால் முஸ்லிம் நாடுகள் அதிருப்தி!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 24 வரை மருத்துவ அவசரநிலை தொடரும் – பிரான் அரசு அறிவிப்பு...
பாகிஸ்தானில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் இடித்து தகர்க்கப்பட்டது!
|
|