ஆழிப்பேரலை : இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் நில அதிர்வுகளை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 1350ஐ அண்மித்துள்ளது.
இதுவரையில் ஆயிரத்து 347 பேரின் சடலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 மெக்னிரியுட் அளவான நில அதிர்வை அடுத்து பாரிய ஆழிப்பேரலை ஏற்பட்டது.
இதனால் பலு நகரின் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Related posts:
சீனாவின் அதிரடி முடிவு - அமெரிக்க பொருட்களுக்கான வரி அதிகரிப்பு!
பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் - ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நிய...
|
|