ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் ஹைதாவின் இரு மூத்த உறுப்பினர்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் ஹைதா அமைப்பை சேர்ந்த இரு மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அல் கயிதாவின் வட கிழக்கு ஆஃப்கானிஸ்தானின் தலைவர் ஃபரூக் அல்-கட்டானி மற்றும் அவருடைய உதவியாளருமான பிலால் அல்-உடாபி ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக காபுலில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், செளதியில் பிறந்த கத்தார் பிரஜையான அல்-கட்டானியை, மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா வைத்தது.ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இலக்குகளைத் தாக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
Related posts:
மீண்டும் அணு உலையை ஆரம்பிக்க நீதிமன்றம் தடை!
சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் - மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு!
ஜேர்மனியைச் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை - இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்...
|
|