ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!
Wednesday, May 25th, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 18 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயம் அடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
லெபனானில் பிராந்திய மோதல்களை தடுப்பதற்கு புதிய அதிபராக பதவியேற்ற மிஷெல் உறுதி!
நைஜீரியாவில் 17 பேர் சுட்டுக்கொலை!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
|
|
|


