ஆயுத விற்பனையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்!

Thursday, December 29th, 2016

சர்வதேச ஆயுத விற்பனையில் கடந்த ஆண்டு அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. 2015இல் அமெரிக்கா 40 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருப்பதாக அந்நாட்டு பாராளுமன்ற ஆய்வு குழுவின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இது உலக ஆயுத சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸை விடவும் இரட்டிப்பு பெறுமதியான ஆயுத விற்பனையாகும். கடந்த ஆண்டில் பிரான்ஸ் 15 பில்லியன் டொலர் பெறுமதியான அயுத விற்பனை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா 11.1 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது.

அமெரிக்கா கடந்த ஆண்டில் வேறு எந்த நாடுகளை விடவும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அதிகப்படியாக ஆயுத விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான 41 வீதமான ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்துள்ளது. இது 26.7 பில்லியன் டொலர் பெறுமதியானதாகும்.

2014ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த சீனா, 2015இல் 6 பில்லியன் டொலர் என்ற அளவுக்கு வர்த்தகத்தை அதிகரித்துள்ளது. ஆயுத கொள்முதலைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 17 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, கட்டார் முன்னிலை வகிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக 12 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் ஆயுதங்களை வாங்க எகிப்தும், 8 பில்லியன் டொலர் மதிப்பில் ஆயுத கொள்முதலுக்கு சவுதி அரேபியாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. தென் கொரியா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

இது தவிர, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த ஆயுத வர்த்தக அளவு, 2014ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்தாண்டில் குறைந்துள்ளது. 2014இல் 89 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த சர்வதேச மொத்த ஆயுத வர்த்தகம், 2015இல் 80 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.

gun_3109718f

Related posts: