ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிக்க சவுதி இணக்கம்!
Monday, May 21st, 2018
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சவுதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிப்பதற்கு சவுதிஅரேபியா இணங்கியுள்ளதுதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட், இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சவுதி சென்றுள்ள நிலையில், அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே, சவுதி அதற்கு இணக்கியுள்ளது.
இதேவேளை ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான எத்தியோப்பியர்கள் சட்டவிரோதமாக சவுதியில் தங்கியுள்ளனர்.அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கடந்த வருடம் 14 ஆயிரம் எத்தியோப்பியர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பாடசாலை!
வெளிநாட்டு சிறைகளில் 8189 இந்திய கைதிகள் – இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி!
இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு மலேசியா செல்வதற்கு பயணத் தடை - மலேசிய போக்குவரத்து அமைச்சு!
|
|
|


