ஆப்கான் மண்ணில் தீவிரவாதம் கூடாது – ஜெய்சங்கர் வலியுறுத்து!

ஆப்கான் மண்ணில் இருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தலிபான்களின் புதிய அரசு வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் போரால் வாழ்வாதாரம் இழந்த ஆப்கான் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் ஓரணியில் இருக்க வேண்டும் எனவும் ஜெய்சங்கர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்த்திருத்தம் தேவை என்று நீண்டகாலமாக இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட ஜி 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
படகு விபத்து: 75 குடியேறிகள் மீட்பு!
தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்!
ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் - பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!
|
|