ஆப்கானிஸ்தான் வான் வழித் தாக்குதலில் பலர் பலி!

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடமொன்றில் ஆப்கானிஸ்தானிய பாதுகாப்பு படையினரால் வான்வழித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் குண்டூஸ் பகுதியில் உள்ள சமய கல்லூரி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 25 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இருப்பினும், சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
இந்த தாக்குதல் தலிபான்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளபோதும், தலிபான் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்றும் தலிபான் அமைப்பினர் அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
Related posts:
|
|