ஆப்கானிஸ்தான் மீது அதிரடி தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க இராணுவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நன்கர்ஹர் என்ற இடத்தில் முகாமிட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு அமெரிக்க இராணுவம் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா பயன்படுத்திய MOAB எனப்படும் குண்டு சுமார் 21,000lbs எடையுள்ளது.
இந்த குண்டு 300 மீற்றர் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அமெரிக்கா முதன் முறையாக இந்த ஆயுதத்தை போரில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் இந்த தாக்குதல் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ராணுவ வீரர்களை பாராட்டியுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன், இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க இராணுவத்தினருக்கு எனது பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.
Related posts:
|
|