ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு தலிபான்கள் அதிரடி உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாகவும். அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடியுரிமை பெறுவதற்கு தெரசா மே வைத்த புதிய ஆப்பு!
எல்லைப்பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்!
மீண்டும் லசா காய்ச்சல் - 16 பேர் உயிரிழப்பு!
|
|