ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்!
Wednesday, February 8th, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உச்சநீதிமன்றம் அருகே இன்று மாலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41பேர் காயமடைந்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில், வாகனங்கள் நிற்கும் இடத்தில் நீதிமன்ற ஊழியர்கள் வேலை முடிந்து வீடு செல்ல தயாரா நின்ற வேளை குண்டுகளை உடலில் கட்டி எடுத்து வந்துள்ள தீவிரவாதி அக்குண்டுகளை வெடிக்க வைத்துள்ளார்.
குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றம் அமெரிக்க தூதரகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்ற முக்கிய நிலையங்கள் அமைந்துள்ள வீதியில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

Related posts:
ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக்குவேன் - டிரம்ப்!
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு – திணறும் பிரேசில் மருத்துவமனைகள்!
இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் - சீனாவுக்குச் செல்கின்றார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்!
|
|
|


