ஆப்கானிஸ்தானில் கன மழை – பலர் பலி!
Monday, March 4th, 2019
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் பெருக்கெடுத்து அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
மகிழ்ச்சி என்பது செல்போன் ஆப்ஸ் போன்றதல்ல: போப் பிரான்சிஸ்
இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில்நிலையம் பிறகு திறப்பு!
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் - பிரான்சில் போராட்டம் தீவிரம்!
|
|
|


