ஆப்கானிஸ்தானில் கனமழை – வெள்ளத்தால் 10 பேர் உயிரிழப்பு!
Wednesday, March 20th, 2019
ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்தது.
இதனால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் நாசமடைந்தன. பாமியான் மாகாணத்திலும் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அத்துடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. உறைபனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், காணாமல்போன சிலரை தேடும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மாகாணத்தின் அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
|
|
|


