ஆபத்திலா ரஷ்யா…! ஒருமாதத்தில் விடை கிடைக்குமா?
Saturday, December 17th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் இணையவழி மோசடிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டுக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
டொனால்ட் ட்ரம்ப்புக்கு உதவும் வகையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில் ஊடுருவி தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதில் ரஷ்ய உயரதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் நேர்மைத் தன்மையை சீர்குலைக்க எந்த வெளிநாட்டு அரசு முயன்றாலும், அந்த நாட்டுக்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது ரஷ்ய உயரதிகாரிகள் தொடர்புடைய இணையவழி மோசடிகள் குறித்து விரிவாக விசாரிக்க உளவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உளவுத் துறையின் இறுதி அறிக்கை கிடைத்ததும், உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதியுடம் முடிவடையவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது ஒபாமா என்னவிதமான நடவடிக்கையை முன்னெடுப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related posts:
|
|
|


