ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்ற 3,000 ராணுவத்தினர் தடுத்து வைப்பு!
Sunday, July 17th, 2016
துருக்கி ராணுவத்தை சேர்ந்த 3,000 உறுப்பினர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர், துருக்கி ராணுவத்திற்கு சொந்தமான டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அரசுக்கு எதிராக அவர்கள் கைப்பற்றி இருந்தார்கள்.
இரவு முழுக்க இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில், துப்பாக்கிச்சூடு மற்றும் கனரக வெடிப்புகள் ஏற்படுத்திய சத்தங்கள் எதிரொலித்து கொண்டிருந்தன.
ஆனால், வீதிகளில் துருக்கி அதிபர் எர்துவன், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில், துருக்கியில் மீண்டும் புதிய புரட்சிகள் வெடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் வீதிகளிலேயே விழிப்புடன் இருக்கும்படி துருக்கி அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
இங்கிலாந்தின் மிகப் பழமையான ஹொட்டலில் தீ விபத்து!
24 இலட்சம் சிரியார்களுக்கு சவுதி அரேபியா அடைக்கலம்!
விளைவுகள் பயங்கரமாக இருக்கும் - இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை!
|
|
|


