ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுத்தால் பெற்றோர் தண்டப் பணம் செலுத்த வேண்டும்!

Friday, May 27th, 2016

ஆசி­ரி­யர்­க­ளுடன் கைகு­லுக்க மறுக்கும் பிள்­ளை­களின் பெற்றோர் 4,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை தண்­ட­மாக செலுத்த வேண்டும் என சுவிட்­ஸர்­லாந்து பேஸல் பிராந்­திய அதி­கா­ரிகள் உத்­த­ர­விட்­டுள்­ளனர்.

சிரி­யாவைச் சேர்ந்த 14 வயது மற்றும் 15 வய­து­டைய சகோ­த­ரர்­க­ளான இரு முஸ்லிம் மாணவர்கள், தமது மத பாரம்­ப­ரி­யத்­துக்கு முர­ணா­னது என்­பதால் எதிர்ப்­பா­லா­ரான ஆசிரியைகளின் கரத்தைப் பற்றிக் குலுக்க முடி­யாது என தெரி­வித்­ததைத் தொடர்ந்தே மேற்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்­லா­மிய மதம் நெருங்­கிய குடும்ப உற­வி­ன­ராக இல்­லாத எதிர்ப்­பா­லாரை தொட அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

அந்த மாண­வர்­களின் கருத்தை ஏற்ற தெர்வில் நக­ர­ச­பைக்­குட்­பட்ட பிராந்­தி­யத்­தி­லுள்ள குறிப்­பிட்ட பாட­சாலை, முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு கைகு­லுக்­கு­வ­தி­லி­ருந்து விலக்­க­ளிக்க நட­வ­டிக்கை எடுத்தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் இது தொடர்பில் பிராந்­திய அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அந்த அதி­கா­ரி­களால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில், இவ்­வாறு ஆசிரியர்­க­ளுடன் கைகு­லுக்க மறுக்கும் பிள்­ளை­களின் பெற்றோர் 5,000 சுவிஸ் பிராங்­கு­களை (4,000 ஸ்ரேலிங் பவுண்) தண்­ட­மாக செலுத்த வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது ஒரு ஆசிரியருக்கு தன்னுடன் கைகுலுக்கிக் கொள்ளுமாறு ஒரு மாணவரைக் கோர உரிமை உள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: