ஆசியாவின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கில் தீ விபத்து!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் புல்காவ் ஆயுதக் கிடங்கு தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த அந்த நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த தீ விபத்து சம்பவத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை இராணுவ தளபதி ஜெனரல் தல்பிர் சிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்காக புல்காவ் ஆயுதக் கிடங்கே விளங்குகிறது. இங்கு ராணுவத்துக்காக பல்வேறு தொழிற்சாலைகளில் தயாராகும் வெடிகுண்டுகள், கை குண்டுகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வெடிப்பொருட்கள் ஆகியவை முதலில் களஞ்சியபடுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மனுஸ் தீவில் ஈழ அகதிகள் துன்புறுத்தல்!
சிரிய படை மீது துருக்கி இராணுவம் ஷெல் வீச்சு!
சிலியில் 34 ஆயிரத்து 500 ஏக்கரில் காட்டுத்தீ - 13 பேர் தீயில் சிக்குண்டு பலி!
|
|