ஆசியாவின் இதயம்’ மாநாடு இன்று இந்தியாவில்!

Tuesday, April 26th, 2016

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதன்படி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசியாவின் இதயம் மாநாடு நடக்கிறது. இதில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி தலைமையில் அந்த நாட்டு குழுவினர் இன்று டெல்லி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் அய்ஜாஸ் அகமது சவுத்ரி பின்னர் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பதன்கோட் தாக்குதலுக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உறவுச்சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்துவார்கள் என தெரிகிறது.

Related posts: