ஆக்ஸிஜன் விநியோக தடையால் வைத்தியசாலையின் 22 நோயாளர்கள் பலி!

Thursday, April 22nd, 2021

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொள்கலனில் கசிவு ஏற்பட்டத்தில் 22 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த நேரத்தில் 171 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்தனர்.
ஒரு ஆக்ஸிஜன் கொள்கலன் வைத்தியசாலையின் சேமிப்பு தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக ஆக்ஸிஜன் விநியோகம் தடைப்பட்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
“கசிவு காரணமாக ஆக்ஸிஜன் வழங்கல் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது, இதன் காரணமாக வென்டிலேட்டரில் இருந்த நோயாளர்கள் உயிர் இழந்ததாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இறந்தவரின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், “நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிந்த செய்தியைக் கேட்டு நான் வருத்தப்படுகிறேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: