அல்ஜீரியாவில் விமான விபத்து பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Friday, April 13th, 2018
அல்ஜீரியாவில் இராணுவ விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 257 பேரும் பலியானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அல்ஜீரியாவின் பௌஃபரிக் விமானப் படை தளத்திற்கு அருகிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. இதன் போது பலியானவர்களில் இராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அடங்குவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த அனைவருமே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமான விபத்துக்கான விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
காபூல் தாக்குதல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை!
பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
|
|
|


