அரியாசனத்தில் ஓபிஎஸ்ஸா..? சசிகலாவா..?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆட்சியை யார் கைப்பற்றப் போவது..? என்ற அதிகார போட்டி வலுப்பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கட்சியின் இரு தரப்பினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காபந்து அரசாங்கத்தின் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் தற்காலிக பொது செயலாளர் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 33 இலட்சம்பேர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நடத்திய, தொலைபேசி ஆதரவு கணக்கெடுப்பின் போது 48 மணி நேரத்தில் இவ்வாறு 33 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பிற மாநிலங்களில் இருந்தும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து வந்த அ.தி.மு.க கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|