அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு!  

Thursday, October 4th, 2018

சமூகத்துக்காக அரிய தொண்டாற்றியவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அமைதிக்கான நேபால் பரிசு இந்த நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

இயற்பியல், மருத்துவம், வேதியியல் ஆகிய பிரிவுகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

இந்த பரிசை யார் பெறப் போகிறார்கள் என்பதில் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி எடுத்ததால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என்று பிரிட்டன் எம்.பி. போரிஸ் ஜான்சனும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னும் பரிந்துரைத்திருந்தனர்.

இதுதொடர்பாக சர்வதேச அமைதிக்கான ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்மித் கூறுகையில், “வடகொரியாவும்-தென்கொரியாவும் தற்போது நட்பு பாராட்டி வருகிறது.

மனித உரிமைகள் அடிப்படையில் பார்த்தால், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ஆதரவு அதிகம் இல்லை. மூன் ஜே-இன் குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியை அமைதிக்கான ஒரு அடையாளமாக நடத்திக் காட்டினார். டிரம்பைப் பொறுத்தவரை, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றது, இரான் அணுஆயுத ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றது ஆகிய விவகாரத்தில் அவருக்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது’ என்றார்.

சர்வதேச அளவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக “மீடூ’ ஹாஷ்டேக்கை கொண்டு சென்றதில் முக்கியப் பங்குவகித்த காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜ், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாலியல் கைதியாக வைக்கப்பட்டு தப்பி வந்து மனித உரிமை ஆர்வலரான நாடியா மூரத் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலருக்கு நோபல் பரிசு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Related posts: