அமெரிக்க வீரர்களுக்கு ஈரான் அனுமதி!

Tuesday, February 7th, 2017

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நுழைவிசைவு தடை உத்தரவை அந்த நாட்டின் உயர் நீதிமன்று தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி வழங்கியது ஈரான்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற சில தினங்களிலேயே ஈரான், சிகிரியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் உள்ள குடி மக்களுக்கான அமெரிக்க நுழைவிசைவை ட்ரம்ப் தடை செய்தார்.

இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு, ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், வழக்கை விசாரித்து ட்ரம்பின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது அமெரிக்க உயர் நீதிமன்றம். இதையடுத்து ஈரான் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு அங்கு நடைபெறவுள்ள உலகக்கிண்ண மல்யுத்தத்தில் அமெரிக்க வீரர்கள் பங்குபற்ற அனுமதி வழங்கியுள்ளது.

201701290603046765_Iran-warn-Trump-against-building-Mexico-wall_SECVPF

 

 

Related posts: