அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்த வடகொரியா திட்டம்!
Monday, May 29th, 2017
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பனிப்போர் இடம்பெற்றுவரும் நிலையில், அமெரிக்காவின் விமானத்தை வானிலே சுட்டு வீழ்த்த வடகொரியா அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது.
தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துவரும் வடகொரியாவை அச்சமூட்டுவதற்கு, அவ்வப்போது அமெரிக்கா தனது வலிமை பொருந்திய போர் விமானங்களை தீபகற்பத்தின் வான் பரப்பில் வட்டமிட செய்கின்றது.
இதனால் அதிருப்தியடைந்துள்ள வடகொரியா, அமெரிக்க விமானத்தை சமாளிக்க ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. வடகொரிய தேசிய பாதுகாப்பு விஞ்ஞான பயிற்சி நிலையம், இதற்காக ஒரு புதிய வகை விமான எதிர்ப்பு ஆயுத சோதனையை முன்னெடுத்துள்ளது. இதனை பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், இத்திட்டத்தால் உற்சாகமடைந்துள்ளதாகவும், இதனால் குறித்த ஆயுதத்தை அதிகளவில் தயாரித்து நாடு முழுவதும் குவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|
|


