அமெரிக்க விசாவைப்பெற சமூக வலைத்தள விபரங்களும் தேவை!
Thursday, June 30th, 2016
அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது, மற்ற முக்கிய ஆவணங்கள் , தகவல்களோடு, இணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள விபரங்களையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி இனி அமெரிக்கா செல்ல விசா விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதள கணக்கு விபரங்களையும் பகிர வேண்டும். இதற்காக விசா விண்ணப்பங்களில் அதற்கான விபரங்களை கேட்டு புதிய கேள்விகள் சேர்க்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள விபரங்களை சேகரிப்பதன் மூலம் குற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த மற்றும் தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் இணைப்புகளை கண்டறிய உதவும் என்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பட்ட பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒபாமா ஆகஸ்ட் 22 ஆம் திகதி ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|
|


