அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான விரைவில் சந்திப்பு!
Monday, June 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு குறித்த திகதி விரைவில் அறிவிக்கப்படும் என, ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த தீர்மானம் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிரிய விவகாரத்தால் அமெரிக்கா – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Related posts:
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!
டோகோ ஜனாதிபதி இலங்கை வருகை!
பிரான்சின் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
|
|
|


