அமெரிக்க போர் விமானம் ஜப்பானில் விபத்து!
Friday, September 23rd, 2016
அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று ஜப்பானின் ஒகினாவோ மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒகினோவாவில் உள்ள அமெரிக்க படைத்தளமான கடானாவிலிருந்து புறப்பட்ட ஏவி – 8பி என்ற ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை அமெரிக்க தரப்பில் இருந்து விபத்து குறித்து எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எனினும் குறித்த விமானத்தின் விமானி பாதுகாப்பாக வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில்இ விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
சீனாவில் மரண தண்டனை பெற்றவருக்கு 20 ஆண்டுக்கு பின் ரூ.2.75 கோடி நஷ்டஈடு!
கொரோனா: இத்தாலியில் குணமடைந்த 925 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றம்!
சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து ௲ தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை...
|
|
|


