அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்த 10 வயது சிறுவன்!

Thursday, August 24th, 2017

பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அமெரிக்க நாட்டுக்குள் முடிவுக்கு வரும் என 10 வயது சிறுவன் ஜனாதிபதி டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்து வரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தோன்றும் 10 வயது சிறுவன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்காவிலேயே முடிவுக்கு வரும் என எச்சரித்துள்ளான் குறித்த சிறுவன் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரின் மகன் என தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் புரிந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் மனைவி சிரியாவில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. அவரது 10 வயது மகனே தற்போது அமெரிக்காவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளான்.

யூசுப் என தன்னை அறிமுகப்படுத்தும் அந்த சிறுவன், ஜனாதிபதி டிரம்பை யூதர்களின் கைப்பாவை எனவும் கிண்டல் செய்கிறான்.சிரியாவின் ரக்கா பகுதியில் வைத்து குறித்த வீடியோவை பதிவு செய்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் குறித்த வீடியோவை அதிகாரபூர்வமாக இதுவரை நிபுணர்கள் உறுதி செய்யவில்லை மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related posts: