அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னர் ஜப்பான் பிரதமருக்கு கொவிட் தடுப்பூசி!

ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா, கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானில் பகிரங்கமாக தடுப்பூசி பெற்ற முதல் அரசாங்க அதிகாரியுமாவர்.
அடுத்த மாதம் ஜப்பான் பிரதமரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக ஜப்பானின் 80 முதல் 90 அதிகாரிகள் வரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
அமெரிக்க செல்லும் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பினை மேற்கொள்வார். இதனால் ஜனாதிபதியாக பைடன் பதவியேற்றதன் பின்னர் அவரைச் சந்தித்த முதல் உலகத் தலைவர் என்ற பெயரையும் யோஷிஹைட் சுகா பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு உள்ள அச்சத்தை போக்குதற்காகவும் வெளிநாட்டு பயணம் மெற்கொள்ளதன் காரணமாக ஜப்பான் பிரதமர் தடுப்பூசினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் 2 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|