அமெரிக்கா போர் விமானங்கள் வழங்கவில்லை எனின் வேறு நாடுகளில் வாங்குவோம் -பாகிஸ்தான்

Wednesday, May 4th, 2016

அமெரிக்கா ‘எப்-16’ போர் விமானங்களை மானிய விலையில் வழங்கவில்லை என்றால் வேறு நாடுகளில் வாங்குவோம் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 8 ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்துக்கு வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இது குறித்த தகவல் வெளியானதும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது. பாகிஸ்தானுக்கு விமானங்கள் விற்பனை செய்யும் விவகாரத்தில் அமெரிக்க செனட் சபை முட்டுக்கட்டை போட்டது. அது மட்டுமின்றி அந்த நாட்டின் எம்.பிக்களே, பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ‘எப்-16’ ரக போர் விமானங்கள் கிடைக்காது என தெரியவந்தது. அதாவது மானிய விலையில் வழங்கப்படாது, முழு தொகையும் செலுத்தி பாகிஸ்தான் வாங்கவேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது.

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை, பாகிஸ்தானுக்கு ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், இந்த விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தனது வெளிநாட்டு ராணுவ நிதி உதவியை பயன்படுத்துவதற்கு முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பின் அடிப்படையில், இந்த விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் தனது சொந்த நிதியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டோம் என்று கூறினார். அமெரிக்காவின் இந்த புதிய நிபந்தனை, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆனால் முழு தொகையையும் கொடுத்து போர் விமானங்களை வாங்கப்போவது கிடையாது என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா ‘எப்-16’ போர் விமானங்களை மானிய விலையில் வழங்கவில்லை என்றால் வேறு நாடுகளில் வாங்குவோம் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பேசுகையில், “ தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் எப்-16 போர் விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அமெரிக்கா மானிய விலையில் வழங்காவிட்டால் உள்நாட்டு தயாரிப்பான JF-17 விமானங்களை பயன்படுத்துவோம்,” என்று கூறிஉள்ளார். இந்தியாவின் ராணுவ பலம் தொடர்பாக கவலையை எழுப்பிஉள்ள அஜிஸ், அதனை சரிபார்க்கவில்லை என்றால் பாகிஸ்தான் மூலோபாய சக்தியை (ராணுவ பலத்தை) அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். தெற்கு ஆசியாவில் மூலோபாய சமநிலையில் பாதிப்பை தொந்தரவு செய்யும் நடவடிக்கையை சர்வதேச நாடுகள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறிஉள்ளார்.

அமெரிக்காவிற்கு ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தைக் கண்டறிய உதவிய மருத்துவர் ஷகில் அப்ரிதியை கைது செய்துள்ளோம். அவரை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரி வருகிறது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கமுடியாது. அப்ரிதி அவர்களுக்கு ஹீரோவாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு குற்றவாளிதான், என்றும் அஜிஸ் கூறிஉள்ளார்.

Related posts: