அமெரிக்காவுக்கு வடகொரியாவின் பரிசு!
Thursday, July 6th, 2017
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது, இதுவே அமெரிக்காவிற்கு நாங்கள் கொடுத்த சுதந்திரதின பரிசு என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.அந்த சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலகில் உள்ள எந்த பகுதியிலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்ற வல்லமை பெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது.வடகொரியாவின் இந்த செயலுக்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை வெற்றி அமெரிக்காவிற்கான சுதந்திர தின பரிசு என கூறியதாக வடகொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
இத்தாலியில் மறு கட்டுமான பணிகளுக்கு ஒன்பது பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பீடு!
நீரிலும், வானிலும் செல்லும் மிகப் பெரிய விமானம்!
சீன ஜனாதிபதி வடகொரியாவிற்குப் பயணம்?
|
|
|


