அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான்!

மிக மோசமான நஷ்டம் காரணமாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த அமெரிக்காவுக்கான விமான சேவை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல கோடி ரூபாய் நட்டம் காரணமாக, அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவையை வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் நிறுத்திவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாகவே அமெரிக்காவுக்கான விமான சேவையை அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகான தேதிக்கு முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டுவிட்டது.
1961ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் இந்த சேவை, பல முறை நட்டம் காரணமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டாலும், பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயங்கர ஆயுதங்களுடன் பறந்த ரஷ்ய விமானங்கள்!
பிரித்தானியப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !
|
|