அமெரிக்காவில் பாரிய விமான விபத்து!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 9 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானம் விபத்துக்குள்ளாகிய போது 5 இராணுவத்தினர் உட்பட 9 பேர் அதில் பயணித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 5 பேரே பலியானதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், உள்ளூர் ஊடகங்கள் பலியானவர்களின் எண்ணிக்கை 9 என குறிப்பிட்டுள்ளன.எனினும் விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.
Related posts:
படகு விபத்தில் 90 பேர் பலி!
தென்னாபிரிக்கா டேபிள் மலையில் தீப்பரவல் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் அழிவு!
துருக்கியில் பொது முடக்கம் அமுல்!
|
|