அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் கைது!
Saturday, July 29th, 2023
அமெரிக்கா – சென் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார்.
பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த கலிப்போர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு, பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை காவல்துறையினர் காவலில் வைத்தனர்.
மேலும், அந்த பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து வெளிவந்தவுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


