அமெரிக்காவில் தாக்குதலை நடத்தியவர் அகதி ஒருவராம்!

நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகத்துக்கு இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயோர்க்கில் நடத்தப்பட்ட சந்தேகத்துக்குரிய பார ஊர்தி தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர்.
நியூயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதைக்குள் பிரவேசித்த பாரவூர்தியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 29 வயதான சாரதி ஒருவர் காவற்துறையினரால் சுடப்பட்டதுடன், காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மேலும் 11 பேர் வரையிலா காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சாய்ஃபுலோ சாய்போ என்றும் 2010ம் ஆண்டு ஏதிலியாக அமெரிக்காவில் பிரவேசித்த அவர் ஃப்ளோரிடாவில் வசித்து வந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட பார ஊர்தியிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் குறிப்பொன்று காணப்பட்டதாக அந்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Related posts:
|
|