அமெரிக்காவில் சூறாவளி – பலர் உயிரிழப்பு – 12 பேர் காயம் என சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Wednesday, May 22nd, 2024
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் நகரில் பலத்த சூறாவளி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 2,000 பேர் வசிக்கும் கிரீன்ஃபீல்டு வழியாக வீசிய இந்த சக்திவாய்ந்த சூறாவளியால் உள்ளூர் மருத்துவமனை சேதமடைந்துள்ளது,
இதனால், பலர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் நகரத்தில் உள்ள பல பெரிய காற்றாலைகள் இடிந்து விழுந்ததாகவும், ஏராளமான குப்பைகள் அப்பகுதியில் சிதறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் தனது முழு ஆதாரங்களையும் வழங்கும் என்று அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
அத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது சிறப்பு வர்த்தமானி!
நாளைமுதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக...
சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி!
|
|
|


