அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பனிப்பாறையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எங்கரேஜின் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் சிலர் சுற்றுலா வந்ததாகக் கூறப்படுகிறது. காற்றின் வேகம் மற்றும் பனிமூட்டம் காரணமாக திசை மாறிய அந்த ஹெலிகாப்டர் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பயணம் செய்த 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டு சிறை!
கடாபி பேசிய இறுதிவார்த்தைகள்!
நாளை மறுநாள் நிலவில் தரையிறங்குகின்றது சந்திரயான்-3 – இந்திய விண்வெளி ஆராய்சியாளர்கள் நம்பிக்கை!
|
|