அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலி!

அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன.
அந்த வகையில் நேற்று தெற்கு மாகாணமான அலபாமாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் வீதிகளில் சரிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.
இதனிடையே இந்த சக்தி வாய்ந்த புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 100க்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள,
புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது:நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது - ட்ரம்ப்
தமிழக மீனவர்கள் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு!
அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது - ஈரான் அதிபர் !
|
|