அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1400 விமானங்கள் இரத்து!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக 1400 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசுவீசுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
திடீரென தட்பவெப்ப நிலை மோசமானதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
கொலராடோ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேசிய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பனிப்புயல் தாக்கம் உள்ள கொலராடோ, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொலராடோவில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகின்றமையினால் இலட்சக்கணக்கான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும், வயூமிங் நகரில் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
|
|