அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

Sunday, July 14th, 2024

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பிரசார கூட்டத்தின்போது அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மேடைக்கு கீழாக பதுங்கியுள்ளார்.

பின்னர் மேடைக்கு கீழிருந்து அவர் எழுந்தபோது அவரது காதில் இரத்தம் வழிந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் அங்கிருந்து உடனடியாகப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவ இடத்தில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கித் தோட்டா ஒன்று தமது வலது காது மடலைத் துளைத்துச் சென்றதை தாம் உணர்ந்ததாகக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், எக்ஸ் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:


குறைந்த வருமானம் பெறும் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் ...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது - நிதி இராஜாங்க...