அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி!-
Saturday, October 29th, 2016
நுகர்வோர் செலவு மற்றும் ஏற்றுமதியால், 2.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்ததை விட செப்டம்பர் வரையான மூன்று மாதங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வலுவான அதிகரிப்பாக, அமெரிக்க பொருளாதாரம் 2.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதென வணிக துறை தெரிவித்திருக்கிறது.
பொருளாதாரம் முக்கிய பிரச்சனையாக இருக்கும் பேசப்படும் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 நாள்களே இருக்கும் நிலையில், நாட்டின் இந்த ஒட்டுமொத்த வளர்ச்சி விகித புள்ளிவிபரங்கள் வந்துள்ளன.
எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இருப்பதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துகிற சாத்தியக்கூறு அதிகரிக்கலாம் என்று பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts:
ஹஜ் பயணிகளுக்கு இடையூறு : சவுதிக்கு மக்களை அனுப்ப ஈரான் மறுப்பு!
அமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கீடு: சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல நிறுவனத்தில் சோதனை!
அஸ்வின் மரணம் திட்டமிட்ட கொலை?
|
|
|


