அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!
Friday, December 21st, 2018
அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பதவிக்காலம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்தே பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார்.
Related posts:
|
|
|


