அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பனிப்புயல் உருவாகும் அபாயம்!
Saturday, March 2nd, 2024
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் நெவாடா மலைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 225 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புகைப்பிடிப்போரை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ் - எச்சரிக்கும் கலிபோர்னிய பல்கலைக்கழகமொன்றின் ஆய்வு!
நைஜீரியாவில் கொடூரத் தாக்குதல் - பொது மக்கள் 80 பேர் பலி !
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர் - 37 பேருக்கு பி...
|
|
|


